இந்தியா, ஜூலை 1 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவனம் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் இன்று மறைந்த அஜித் குமார் தாயார் மற்றும் சகோதரருடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் முதல்வரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என அதிமுக பொது செயலார் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,

"முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!

கொலை செய்தது உங்கள் அரசு.

"SORRY" என்பது தான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால் தான் அந்த ...