இந்தியா, மே 28 -- கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி 24 நாட்கள் ஆகிவிட்டன. அக்னி நட்சத்திரம் நடைபெறும் இந்த நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும். தென்னிந்தியாவில் அக்னி நட்சத்திரம் மிகப்பெரிய முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மே மாதம் மிகவும் கடுமையான வெப்பம் இருக்கும்.

வெயிலின் தாக்கமானது வழக்கமான நாட்களை விட இந்த கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும் அந்த காலம் தான் கத்திரி வெயில் என அழைக்கப்படக்கூடிய அக்னி நட்சத்திரம் காலமாகும். இந்த 2025 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த மேம் நான்காம் தேதி அன்று தொடங்கியது. வருகின்ற மே 28ஆம் தேதி அன்று அதாவது நாளை நிறைவு பெறுகின்றது.

சாஸ்திர ரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் சில விஷயங்களை இந்த அக்னி நட்சத்திர காலத்தில் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிற...