இந்தியா, ஏப்ரல் 18 -- கோடைக்காலம் என்றாலே குளுகுளுவென எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதிலும் சாலையோரக் கடைகளில் தயாரிக்கப்படும் பாதாம் பால் கலந்த ஃப்ரூட் மிக்ஸ் மிகுந்த சுவையைக் கொண்டதாக இருக்கும். அது எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். அத்தனை சுவையானதாக இருக்கும். சூப்பர் சுவையான அந்த ஃப்ரூட் மிக்ஸை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அதை செய்வதற்கு நாம் முதலில் பாதாம் பாலை தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். பாதாம் பால் செய்வதற்கு பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். அதில் பாதாம் பொடி ரெடிமேடாக வாங்கி கலந்துகொள்ளலாம் அல்லது வீட்டிலே பாதாம் மிக்ஸ் தயாரித்துக்கும் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

வீட்டிலேயே பாதாம் மிக்ஸ் தயாரிக்க 20 முதல் 3...