இந்தியா, ஏப்ரல் 8 -- ஃப்ரீஸ்டைல் ​​செஸ் கிராண்ட்ஸ்லாம் சுற்றுப்பயணத்தின் பாரிஸ் லெக்கில், முதல் நாள் போட்டிகளில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 வயதாகும் இந்திய வீரரான அர்ஜுன் எரிகேசி, முதல் இரண்டு ரேபிட் சுற்றுகளில் முறையே உலகின் முதல் இடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் மற்றும் 5வது இடத்தில் இருக்கும் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.

இவரது சிறந்த ஓட்டத்தை மற்றொரு இந்திய வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான டி குகேஷ், ரவுண்ட் 3ல் சிறிது நேரம் தடுத்து நிறுத்தினார். பிப்ரவரியில் வெய்சென்ஹாஸில் நடந்த முதல் லெக்கில் வெற்றி பெறாமல் போன பிறகு, இந்த ஆண்டு ஃப்ரீஸ்டைல் ​​செஸ் ஆட்டத்தில் குகேஷ் பெற்ற முதல் முழு புள்ளி இதுவாக அமைந்தது. இருப்பினும், இது முதல் நாளில் அவர் பெற்ற ஒரே வெற்றியாக மாறியது.

மேலும் படிக்...