இந்தியா, மார்ச் 14 -- புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடய பிரபஞ்சம் மற்றும் கடவுளின் இருப்பு அவரது கருத்துகள் கவனிக்க கூடிய ஒன்றாக இருந்தது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்த ஹாக்கிங், பிரபஞ்சத்தின் மர்மங்களை நோக்கிய ஆய்வுகளில் தனது கவனத்தை செலுத்தினார்.

இவரது தந்தை மருத்துவர் தாயார் தத்துவவியல் பட்டதாரி. வடக்கு லண்டனை சேர்ந்த இவர்கள் 2ஆம் உலகப்போர் காரணமாக ஆக்ஸ் போர்டு நகரில் குடியேறினர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில் 1959ல் இடம் கிடைத்த உடன் தன் விருப்பத்தின் காரணமாக இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்க தொடங்கினார். இதில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

21 வயதில், ஹாக்கிங்கிற்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்ற நரம்பியக்...