இந்தியா, மார்ச் 12 -- உடல் நலனுக்கு உகந்த ஆரோக்கியம், ஊட்டச்சத்துக்கான தேடலில் இருப்போருக்கான எளிய தீர்வாக முளைக்கட்டிய தானியங்கள் உள்ளது. தானியங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலமாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள் உண்டாகிறது.

பச்சைப்பயறு, நிலக்கடலை, மூக்கடலை, காரா மணி, கொள்ளு, கோதுமை, கம்பு, சோளம், வெந்தயம் உள்ளிட்ட தானியங்களில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்களை குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில் நன்கு கழுவிய தானியங்களை சுத்தமான தண்ணீறில் ஊற்றி 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

ஊறவைத்த பிறகு, மெல்லிய துணி அல்லது வடிக்கட்டியை பயன்படுத்தி தானியங்களில் இருந்து தண்ணீரை வடிகட்டவும்.

நீரில் வடிகட்டிய தானியங்களை சுத்தமான துணியில் மாற்றி, காற்று சுழற்சி...