இந்தியா, மே 6 -- நடிகர் தனுஷின் 50ஆவது படமான 'ராயன்' படத்தின் ரீலிஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ராயன். இந்தப்படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகளை இயக்குநர் செல்வராகவன்தான் செய்தார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், " 'என் தம்பியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்' என்றுகூறிய செல்வராகவன...