இந்தியா, மார்ச் 14 -- ஒவ்வொரு பெண்ணும், தன் கணவருக்கு எந்த தீங்கும் வரக்கூடாது, அவர் நலமுடன், நோய் நொடி இல்லாத வாழ்வு பெற்று, குடும்பம் காத்தருள வேண்டும் என்ற நோக்கம் கொண்டு, அனுஷ்டிக்கும், ஒரு நல்ல விரதம் காரடையான் நோன்பு.

காமாட்சி நோன்பு,கேதார கௌரி விரதம்,சாவித்திரி விரதம்,மாசிக் கயறு நோன்பு போன்ற பல பெயர்களில் அனுஷ்டிக்கப்படும் இந்நோன்பு,மாசி மாதம் முடிந்து,பங்குனி மாதம் தொடங்கும் வேளையில்,சரடு அணிந்து கடைபிடிக்கப்படுகிறது. சத்யவான், சாவித்திரி கதையே இவ்விரதம் வரக் காரணம் என்பர்.

எமனுக்கு நன்றி செலுத்த, சாவித்திரி, கார்கால, விதை நெல் குத்திய பச்சரிசி மாவு உடன், வெல்லம், காராமணி கலந்து வெல்ல அடையும், உப்பு கலந்த அடையும், தனித் தனியாக செய்து, அந்தக் காரடையுடன் வெண்ணை சேர்த்துப் படைக்க, அதுவே இன்றுவரை விரத நைவேத்ய வழக்கமாயிற்று.

நைவேத்...