இந்தியா, மே 6 -- மிதுன ராசியை பொறுத்த வரை, குருபகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். 12ம் இடம் என்பது ஜோதிடத்தில் மறைவு ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. மறைவு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான், 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கிறார்.

ஜோதிடத்தில் குரு பகவான் எந்த இடத்தை பார்க்கிறாரோ, அந்த இடத்தை அவர் வளர விடுவார், அதில் வளர்ச்சியைக்கொண்டு வருவார். அதாவது பெரிதுபத்துவார்.

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை, சிறிய வீடாக இருந்தால் அதை பெரிய வீடாக மாற்றுவார், வாகனங்களிலும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வைப்பார்.

6 -ம் இடம் என்பது கடனைக் குறிக்கும். ஆகையால் கடன் உங்களுக்கு இருந்தால், அதை அதிகரிக்கச் செய்வார். 6ம் இடத்தை பார்ப்பதால், வீட்டில் தேவையில்லாத குழப்பங்கள், மன கஷ்டங்கள் உண்டாகும். சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, ...