இந்தியா, மே 6 -- 2024 ம் ஆண்டு குரு பகவானால் குபேரயோகத்தை பெறப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை ஜோதிடர் சிம்மா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, "மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்திற்கு பணவரவு நன்றாக இருக்கும்.

அதே போல, ரிஷப ராசிக்கும், ரிஷப லக்னத்திற்கும் இந்த ஆண்டில் பணவரவு நன்றாக இருக்கும். காரணம், உங்கள் ராசியின் மீதே குரு பகவான் அமர்ந்து இருக்கிறார். குருவை ஜோதிடத்தில் தனக்காரன் என்று அழைப்போம். இப்படியான அமைப்பு, உங்களிடத்தில் இருப்பதால் நீங்கள் காசை தேடி ஓடுவீர்கள். அது குறித்தான சிந்தனைகள் அதிகமாகும். பணம் பற்றிய சிந்தனைகள் எழும் போதுதான், பணத்தை தேடி ஓடுவோம். பணத்தை நாம் தேடும் போது, பணம் நம்மைத் தேடி வரும்.

கடகராசிக்கும் இந்தாண்டு பணவரவு நன்றாக இருக்கும். காரணம் குரு பகவான் லாபஸ்தானத்திலேயே அமர்ந்து இருக்க...