இந்தியா, பிப்ரவரி 12 -- தொழிற்சாலை கழிவுகள், புகை பழக்கம், வாகன புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று அதிகளவில் அன்றாடம் மாசுபட்டு வருகிறது. இதனால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் அதிகரித்து வருகிறது.

காற்று மாசு குறித்து பல்வேறு ஆய்வுகளும் நமக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ள வேளையில் தற்போது இன்னொரு ஆய்வும் அச்சுறுத்துகிறது.

காற்று மாசால் வெளியாகும் நைட்ரேட்டு, ஓசோனால் (Oxidants) இரவு நேர பூச்சிகளால் (Hawkmoth) மாலை நேர பூக்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மனிதர்களால் நிகழும் மாசு காரணமாக, பூச்சிகளின் மோப்ப சக்திக்கு பாதிப்பு ஏற்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது தடைபட்டுள்ளது. பூக்களில் நறுமணத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு காற்று மாசால் வெளியாகும் நைட்ரேட...