இந்தியா, மே 6 -- திமுகவினால்தான் தான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்று நடிகை விந்தியா குமுதா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அம்மா என்னை தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய அழைத்தார். அப்போது நான் அம்மாவிடம், எனக்கு தமிழ் ஒழுங்காக தெரியாது. நான் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் சில விஷயங்களை சொல்லி, இதை மட்டும் பேசினால் போதும் என்று கூறினார்.

இதனையடுத்து மேக்கப் போட்டுக் கொண்டு, மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்தேன். அந்த தேர்தலில் கட்சி தோற்று விட்டது. என்னுடன் இரண்டு நடிகைகள் அப்போது வந்தார்கள். ஆனால் அவர்கள் சென்று விட்டார்கள். எனக்கு அம்மாவை மிகவும் பிடிக்கும். நான் இருந்தேன்.

எனக்கு அந்த தேர்தலில் ஒரு உண்மை புரிய வந்தது. அதாவது சும்மா மேக்கப் போட...