இந்தியா, மே 9 -- 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் வரிசையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார் நடிகர் கார்த்திக். கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தவர். நவரசங்களை அள்ளித் தெளிக்கும் நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் நடிப்பில் அன்றைய காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அந்த வரிசையில் 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி' போன்று காமெடி சரவெடிகளை கொளுத்திப் போட்ட 'பிஸ்தா' படத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

அப்பாவி மற்றும் அடாவடி என இரு முகம் காட்டும் கதாபாத்திரத்தில் கார்த்திக் அசத்தி இருப்பார். பிரமிட் நடராஜன் தயாரித்த இப்படத்திற்கு கென்னடி கதை, வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியா...